தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்!
மின் கட்டண அதிகரிப்பினால் தேயிலை தொழிற்சாலைகளை மூட வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
காலியில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் நிஷாந்த பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மின்கட்டண அதிகரிப்பிற்கு, தற்போதைய மற்றும் முன்னாள் அரசியல்வாதிகளே காரணம் என பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.