பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள்!

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள்!

100 மீற்றர் மற்றும் 1500 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இந்த தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் நுவன் இந்திக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 

அவர் போட்டித் தூரத்தை 11.63 செக்கன்களில் நிறைவு செய்துள்ளார். 

அத்துடன், 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பிரதீப் சோமசிறி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் 

அவர் போட்டித் தூரத்தை 4 நிமிடம் 5.14 செக்கன்களில் நிறைவு செய்துள்ளார்.