இங்கிலாந்தின் வெள்ளையர் அல்லாத நீதிபதியாகும் இலங்கைப் பெண்!

இங்கிலாந்தில் கறுப்பின மற்றும் சிறுபான்மை இன நீதிபதியாக இலங்கை வம்சாவளிப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் வெள்ளையர் அல்லாத நீதிபதியாகும் இலங்கைப் பெண்!

இங்கிலாந்தில் கறுப்பின மற்றும் சிறுபான்மை இன நீதிபதியாக இலங்கை வம்சாவளிப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 34 வயதான ஆயிஷா ஸ்மார்ட், என்பவரே இங்கிலாந்தின் வடகிழக்கில் இந்த உயர்பதவிக்கு தெரிவாகியுள்ளார்.

அதேபோன்று வெள்ளையர் அல்லாத இளைய நீதிபதி என்ற அடிப்படையில் மூன்றாமவராகவும் அவர் கருதப்படுகிறார்.

இங்கிலாந்தில் ஒரு நீதிபதி ஆவதற்கான செயல்முறை சிக்கலானது, இரண்டு தேர்வுகள், பயிற்சி மற்றும் ஒரு நேர்காணல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

அத்துடன் இறுதி ஒப்புதல் மன்னரால் வழங்கப்பட வேண்டும்.

எனினும் இந்தச் செயல்முறைகளை மேற்கொள்ளவேண்டும் என்று இலக்குடன் செயற்பட்டு அதில் வெற்றி பெற்றதாக ஆயிஸா ஸ்மார்ட் தெரிவித்துள்ளார்.