ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமை தெற்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் - ஜனாதிபதி ரணில்!

ஸ்வீடனில் இஸ்லாமிய மறை நூலான புனித குர்ஆன் எரிக்கப்பட்டமை மத சுதந்திரத்தை மீறும் செயலென இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டித்துள்ளதுடன், ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவை இந்த விடயத்தில் மௌனம் காப்பதாக குற்றம்சுமத்தியுள்ளார்.

மனித உரிமைகள் பேரவை அழுத்தங்களுக்கு அடிபணிந்து இதை கருத்துச் சுதந்திரம் என அறிவித்தால், உலகளாவிய தெற்கு மற்றும் மேற்கத்தேய மதிப்பு கட்டமைப்புகளுக்கு இடையே பிளவு ஏற்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை கருத்துச் சுதந்திரச் செயலாகக் கருத முடியாது.

பெரும்பாலான மக்கள் இதை மதத்தின் மீதான தாக்குதலாகக் கருதுகின்றனர்.

ஆனால் இந்தச் செயலை ஆதரித்த சில மேற்கத்தேய நாடுகள், இதனை கருத்துச் சுதந்திரம் என்று விபரிக்க முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் இடையில் நிறைவேற்றப்பட்ட கடப்பாடுகளை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கையின் சர்வதேசக் கடமைகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்கான தமது உறுதிப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் வலியுறுத்தினார்.

மறுபுறம் இந்தச் செயல் மத சுதந்திரத்தை மீறுவதாக அறிவிக்கப்பட்டால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கருத்துச் சுதந்திரத்தின் வரம்புகளை வரையறுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தெற்கின் பூகோள விழுமியங்களை மதிக்குமாறும், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் மேற்கத்தேய நாடுகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.