கோழியிறைச்சி கிலோவொன்றின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு!
கோழியிறைச்சி கிலோவொன்றின் விலையை இன்று (21) நள்ளிரவு முதல் 100 ரூபாயால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோழியிறைச்சி கிலோவொன்றின் விலையை இன்று (21) நள்ளிரவு முதல் 100 ரூபாயால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோழியிறைச்சி உற்பத்தி நிறுவனங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
சகல விதமான கோழியிறைச்சிகளினதும் விலை நாளை முதல் 100 ரூபாய் குறைத்து சந்தையில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னர், கோழியிறைச்சி கிலோவொன்றின் விலை மேலும் 100 ரூபாயால் குறைப்பதற்கு கோழியிறைச்சி உற்பத்தி நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, கோழியிறைச்சி கிலோவொன்றின் விலை ஆயிரத்து 150 ரூபாயாக்கு உட்பட்ட விலையில் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்தார்