லிட்ரோ தலைவர் பதவி விலகல் - எரிவாயு தட்டுப்பாடு நிலவுமா?

லிட்ரோ தலைவர் பதவி விலகல் - எரிவாயு தட்டுப்பாடு நிலவுமா?

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

கடிதம் மூலம் இந்த பதவி விலகலை  அவர் அறிவித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி  வரை எரிவாயு தட்டுப்பாடு இருக்காது என்றும் முதித பீரிஸ் சுட்டிக்காட்டியிருந்தார். 

முதித பீரிஸ் 2022 ஜூன் 13 அன்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக பணியாற்றத் தொடங்கினார்.

எரிவாயு கொள்வனவு தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலை காரணமாக அப்போதைய தலைவர் இராஜினாமா செய்ததையடுத்து முதித பீரிஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

முதித பீரிஸ் இதற்கு முன்னர் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்