இறக்குமதி செய்யப்படும் அரிசி 10 நாட்களுக்கு மாத்திரமே போதுமானது!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசித் தொகை 10 நாட்களுக்கு மாத்திரமே போதுமாக உள்ளதாக அரிசி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேலும் அரிசி இறக்குமதி செய்யப்படவில்லையெனின் அரிசித் தட்டுப்பாடு அதிகரிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இந்தியாவிலிருந்து 70,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்நிலையில், அரிசியை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை அரசாங்கம் நீடித்துள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் அரிசி கையிருப்பு சுமார் ஒரு இலட்சத்து பத்தாயிரம் மெட்றிக் டொன் ஆகும்.