இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள சாலை விபத்துகள் – இந்த ஆண்டு இதுவரை 2243 பேர் பலி!

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள சாலை விபத்துகள் – இந்த ஆண்டு இதுவரை 2243 பேர் பலி!

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை சாலை விபத்துகளில் 2,243 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், பல பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் இரண்டு இளைஞர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ள பின்னணியில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை, 22,967 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன, அதில் 2,141 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

அதாவது மொத்த வாகன விபத்துக்களில் ஒன்பது வீதமானவை மரண விபத்துகளாக பதிவாகியுள்ளன. அவற்றில் 6500 விபத்துக்கள் கடுமையான விபத்துக்கள்.

இதே காலகட்டத்தில் பதிவான சிறு விபத்துகளின் எண்ணிக்கை 9127 ஆகும். அதன்படி, ஏறத்தாழ 60 சதவீத விபத்துக்கள் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தியது.

இதேவேளை நேற்று (21) இடம்பெற்ற வீதி விபத்துக்களில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதுடன் 62 பேர் காயமடைந்துள்ளனர். ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிய பயணித்த பேருந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

இதில் மூவர் கொல்லப்பட்டனர். 45க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பத்தேகம மற்றும் பின்னதுவ நுழைவாயில்களுக்கு இடையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கெப்பத்திக்கொல்லாவ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடுகண்ணாவ பகுதியில் வான் ஒன்றும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளதுடன், பேருந்து ஒன்று மரத்தில் மோதியதில் 10 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.