கண்டுமணி லவகுகராசாவினால் 11 கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை வெளியீடு!

கண்டுமணி லவகுகராசாவினால் 11 கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை வெளியீடு!

ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கான தீர்வை பெறுவதற்காக அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அதற்காக, வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைபப்பாளர் கண்டுமணி லவகுகராசாவினல் 11 கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வீழ்ச்சியடைந்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் மீளவும் கட்டியெழுப்ப வேண்டும்

தமிழ் தேசிய அரசியலை அறிவுபூர்வமான நவீன அரசியல் கொள்கைகளுடன் கூடிய அரசியல் பரிணமிக்க சூழலாக மாற்ற வேண்டிய கடப்பாடு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு உள்ளது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், தமிழ் மக்களையும் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களிடமிருந்து பிரிக்காதவாறு கொள்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியில், தமிழ் தேசிய அரசியல் தலைமைத்துவங்கள் சார்ந்து சந்தேகங்கள் எழாதவாறு உறவுகளை வெளிப்படைத் தன்மையுடன் பேணவேண்டிய பொறுப்பு உள்ளது.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெயர்ந்து வாழும் மலையகத் தமிழ் மக்களின் உறவில் முறுகல் ஏற்படுத்தாதவாறு பொறுப்புடன் செயற்பட வேண்டிய கடப்பாடு தமிழ் அரசியல் தலைமைகளுக்கு உள்ளது.

ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு என்பதை தமது இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தமிழ் தேசிய கட்சிகளிடம் கோரியுள்ளது.