யாழில் சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் நோக்கில் கண்காட்சி!
சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாய திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்றது.
சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாய திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்றது.
சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் நாள் என்ற தொனிப்பொருளில் குறித்த கண்காட்சி வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
கம்பு, திணை, வரகு, சாமை என பல வகையான சிறுதானியங்களில் இருந்து எவ்வாறு உணவு தயாரிப்பது என்பது பற்றி அங்கு தெளிவுபடுத்தப்பட்டது.
தொடர்ந்து சிறு தானிய உணவுகள் பரிமாறப்பட்டதுடன், உலர் தானிய வகைகளும் விற்பனை செய்யப்பட்டன.
அத்துடன், தானியங்களின் ஊடாக கிடைக்கும் போஷாக்கு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கண்காட்சியும் நடத்தப்பட்டது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகள், பயனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.