பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் முதலிடம்!

பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் முதலிடம்!

இலங்கையில் 2023 ஆண்டின் சிறந்த  பல்கலைக்கழகமாக பேராதனைப் பல்கலைக்கழகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாகவும் பேராதனைப் பல்கலைக்கழகம் முதல் இடத்தில் உள்ளமை சிறப்பம்சமாகும்.

2023 Times Higher Education இதழில் வெளியான தரவரிசை அறிக்கையின் படி மீண்டும் பேராதனைப் பல்கலைக்கழகம் தேர்வாகியுள்ளது .

இந்த தரவரிசையானது நிலைத்தன்மை மேம்பாட்டு இலக்குகள் உள்ளிட்ட 13 செயல்திறன் குறிகாட்டிகளை பயன்படுத்தி வகைப்படுத்தப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.