வவுனியா மற்றும் கம்பஹா விபத்துக்களில் நான்கு பேர் பலியாகினர்!
வவுனியா - கன்னாட்டி பகுதியில் இன்று (16) இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் பலியாகினர். வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த பாரவூர்தி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்றவர்கள் மீது மோதியுள்ளது.

வவுனியா - கன்னாட்டி பகுதியில் இன்று (16) இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் பலியாகினர்.
வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த பாரவூர்தி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்றவர்கள் மீது மோதியுள்ளது.
சம்பவத்தில் 36 வயதான தாயும் 6 வயதான அவரது மகளும் பலியானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் குறித்த பாரவூர்தியில், 3 பேர் பயணித்துள்ளனர்.
அவர்கள் தப்பியோட முயற்சித்த சந்தர்ப்பத்தில், பொதுமக்கள் அவர்களை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை, கம்பஹா தொம்பே - கிரிதர - தெல்கொட பிரதேசத்தில் கடற்படையைச் சேர்ந்த பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் இன்று காலை (16) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த மேலும் ஒருவர் இராகமை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கடற்படை பேருந்து கிரிந்திவெல பகுதியில் இருந்து கடற்படை முகாம் நோக்கி பயணித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் பாரவூர்தியில் பயணித்த 39 மற்றும் 46 வயது மதிக்கத்தக்க இருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.