நடிகர் விஜய் - சங்கீதா பற்றி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மூலம் வௌிவந்த தகவல்!

நடிகர் விஜய் - சங்கீதா பற்றி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மூலம் வௌிவந்த தகவல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தனது அரசியல் நகர்வுக்கு பின்னரும் அவரது மனைவி சங்கீதாவை விட்டு பிரிந்துவிட்டதாக, பல சர்ச்சைகள் இணையத்தில் எழுந்தன. 

எனினும், இதனை மறுத்து விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை. இதனால், யார்யாரோ இதை பற்றி பேசி வந்தனர்.

ஒரு கட்டத்தில் இது உண்மை என்பது போலவே ஆகிவிட்டது. விஜய்யுடன் அவரது மனைவி சங்கீதா எந்த ஒரு இடத்திற்கும் செல்லவில்லை. 

இசை வெளியிட்டு விழாவிற்கு கூட வருவதை நிறுத்திவிட்டார், விஜய்யின் வீட்டிலிருந்து சங்கீதா வெளியேறிவிட்டார் என பல விதமான செய்திகள் வெளியானதை நாம் பார்த்தோம்.

இந்த நிலையில், இதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரபலம் ஒருவர் தகவலை பகிர்ந்துள்ளார். மேக்கப் ஆர்டிஸ்ட்டான இவர், விஜய்யின் தீவிர ரசிகராம்.

அவர் கூறியதாவது "விஜய்யின் தீவிர ரசிகை நான். அவருடைய வீட்டிற்கு சென்றும், அவரை பார்க்க முடியவில்லை. 

ஆனால், அவருடைய மனைவி சங்கீதா மற்றும் மகனை சந்தித்தேன். இரண்டு முறை சங்கீதாவிற்கு மேக்கப் போடும் வாய்ப்பு கிடைத்தது. 

அதற்காக தான் வீட்டிற்கு சென்றேன்" என கூறியுள்ளார். விஜய்யுடன் சங்கீதா ஒரே வீட்டில் இருப்பது, இவர் கூறியதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. 

இதன்மூலம் இதுவரை வெளிவந்த சர்ச்சைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.