ஜெயிலர் படத்தில் சம்பளம் எவ்வளவு? உண்மையை உடைத்த வில்லன் விநாயகன்!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களிலேயே அதிகபட்சம் வசூலித்த படம் என்கிற சாதனையையும் செய்துள்ளது.

இந்த படத்தின் வெற்றிக்கு ரஜினி, அனிருத் ஆகியோரின் பங்குடன், வில்லனாக நடித்த விநாயகனின் பங்களிப்பும் மிக முக்கியமானது

இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தாலும் அவர்களை விட பெயரை தட்டி சென்றவர் நடிகர் விநாயகன் தான்.

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து பெரிய அளவில் எங்கேயும் பேட்டிகளில் முகம் காட்டாமல் இருந்த விநாயகன், சமீபத்தில் ஒரு வீடியோ மூலமாக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது சில சேனல்களில் பேட்டியளித்து வருகிறார் விநாயகன். 

அப்படி ஒரு ஊடகத்தில் அவர் கூறும் போது, “இந்த படத்திற்காக எனக்கு 35 லட்சம் சம்பளம் தரப்பட்டதாக ஒரு தவறான தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

அதைவிட மூன்று மடங்கு சம்பளம் எனக்கு கொடுக்கப்பட்டது. 

அது நானே கேட்ட தொகை தான். அதைக் கொடுத்ததோடு படப்பிடிப்பில் எனக்கு ராஜ மரியாதையும் கிடைத்தது. 

ஒரு படத்திற்காக கிட்டத்தட்ட ஒரு வருட காலம் பணியாற்றியது என்றால் அது இந்த படத்தில் தான். 

அது மட்டுமல்ல படத்தில் அதிக நேரம் வரும் விதமாக நான் நடித்ததும் ஜெயிலர் படம் தான். இனி வரும் நாட்களில் கதைகளை செலெக்ட்டிவாக தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.