கல்வி என்ற தடுப்பூசியை குழந்தைகளுக்கு கொடுத்தால், நாடு தானாக வளரும் – தம்மிக்க பெரேரா
இலங்கையர்களின் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல், தொடர்பாடல் மற்றும் சிந்தனைத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில்
இலங்கையர்களின் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல், தொடர்பாடல் மற்றும் சிந்தனைத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழில் வாய்ப்புகளை முழுவதுமாக உள்ளடக்கும் நோக்கத்துடன் டி.பி. கல்வி நிறுவனத்தின் தலைவர் தம்மிக்க பெரேரா “DP கல்வி” திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்த திட்டத்தின் 61வது நிலையமானது அநுராதபுரம் நகரிலுள்ள வீரசேகரராம ஸ்ரீ பாரதிந்திர மகா பிரிவேன் வித்யாதனயவை மையமாக கடந்த ஜூன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
40 நவீன கணணிகள் பொருத்தப்பட்ட இந்த நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன், பாடநெறிகளை பூர்த்தி செய்த 100 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் "கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
உலகில் எந்த நாடும் கல்வியறிவின்றி வளர்ச்சி அடையவில்லை. கல்வியில் பின்தங்கியவர்களைக் கொண்டு எந்த நாடும் வளர்ச்சி அடையவில்லை.
இந்த கல்வி என்ற தடுப்பூசியை குழந்தைகளுக்கு போடும் போது நாடு தானாக உயரும்.
எனக்கும் இந்த நாட்டை உயர்த்த வேண்டும் என்ற எண்ணமே உள்ளது" என டி.பி. கல்வி நிறுவனத்தின் தலைவர் திரு.தம்மிக்க பெரேரா நிகழ்வில் உரையாற்றிய போது குறிப்பிட்டார்.