அப்துல் மஜீட் அவர்களுடைய இழப்பு கட்சிக்கு பேரிழப்பாகும்!
அனுதாப செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் MLAM ஹிஸ்புல்லாஹ்-
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முழக்கம் அப்துல் மஜீட் அவர்களுடைய மரணச்செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன்.
அவரின் இழப்பு கட்சிக்கு பேரிழப்பாகும். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியிலே மறைந்த மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்களோடு இனைந்து 1987 ஆம் ஆண்டு தொடக்கம் கட்சியின் ஒவ்வொரு தேர்தல்களிலும் பாராளுமன்ற உறுப்பினர் , மாகாண சபை உறுப்பினர்களை உருவாக்குவதற்காக நாடு முழுவதும் சென்று தனது கம்பீர குரலிலே முழங்கி கட்சியின் கொள்கைகளை விளக்கி , கட்சியின் வெற்றிக்காக பாடுபட்டவர் இதனால் தான் அவருக்கு முழக்கம் மஜீத் என்ற பட்டத்தையும் மறைந்த தலைவர் அஷ்ரப் சேர் வழங்கியிருந்தார்கள்.
தற்போதைய கட்சியின் தலைவர் சட்ட முதுமாணி ரஊப் ஹக்கீம் அவர்களோடும் விசுவாசமாக கட்சியின் வளர்ச்சிக்காக அன்று தொடக்கம் இறுதி மூச்சுவரைக்கும் பாடுபட்டார்கள்.
எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக வாழ்ந்தவர். அவரின் இழப்பு முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கும் , கட்சியின் போராளிகளுக்கும் பேரிழப்பாகும்.
அவரின் மறுமை வாழ்வுக்காக நாம் அனைவரும் பிராத்திப்பதோடு அவரின் மறைவால் வாடும் அவரின் குடும்பத்திற்கு அல்லாஹ் மன அமைதியினையும் பொறுமையினையும் வழங்குவானாக ! மேலும் அவரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 9 மணிக்கு கல்முனையில் இடம் பெறவுள்ளது. முடியுமானவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.