கொழும்பில் தங்கியிருக்காது வீடு வீடாக பிரசாரம் செய்யுங்கள் - ரணில் பணிப்பரை!
கொழும்பில் தங்கியிருக்காது ஊர்களுக்குச் சென்று வீடு வீடாக பிரசாரம் செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவிற்கு கம்பஹா மாவட்டமும்.
கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவிற்கு காலி மாவட்டமும்.
தேசிய அமைப்பாளர் சாகல ரட்நாயக்கவிற்கு கொழும்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களும்.
உப தலைவர் அகில விராஜ் காரியவசத்திற்கு குருணாகல் மாவட்டமும்.
தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்கவிற்கு கொழும்பு மாவட்டமும், வடக்கு மாகாணமும்.
பொருளாளர் பீரே ஷருக்கிற்கு மாவனல்ல தொகுதியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.