வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் கைது!
வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் அமைப்பாளருமான கு.திலீபன் மற்றும் அவரது செயலாளர் வவுனியா பொலிஸாரால் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண மோசடி தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணி தருவதாக கூறி நபர் ஒருவரிடம் 15 இலட்சம் ரூபா மோசடி செய்தாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட திலீபன் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.
அண்மையில் அவர், கட்சியில் இருந்தும் கட்சியின் சகல பதவிகளையும் இராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.