அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி இன்று (28) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, இன்று (28) 295 ரூபாய் 54 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபாய் 76 சதமாக காணப்பட்டது.
அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 305 ரூபாய் 33 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 306 ரூபாய் 34 சதமாக காணப்பட்டது.