இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்ட உதவி பொருட்கள் காஸா அவதி!

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்ட உதவி பொருட்கள் காஸா அவதி!

காஸாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட உதவி பொருட்களை இஸ்ரேல், காஸாவின் எல்லைப் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலின் இத்தகைய செயற்பாட்டிற்குப் பல நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

இதேவேளை, காஸாவின் பல பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட, 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை சமீபத்தில் வெளியான ஒரு காணொளியில், ஒரு பலஸ்தீனப் பெண் தரையில் விழுந்த உணவை எடுத்து சேகரிப்பது பதிவாகியிருந்த நிலையில் இந்தக் காட்சிகள், அங்கு நிலவும் மனிதாபிமான நெருக்கடியான நிலையை வெளிப்படுத்துவனவாக அமைந்தன.

இஸ்ரேலின் முழுமையான தடையால், கடந்த இரண்டு மாதங்களாக காசா பகுதியில் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்காமல், சுமார் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அடிப்படை உணவிற்காக கஷ்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.