அமெரிக்காவில் ஆட்சி மொழியாக ஆங்கிலம் அறிவிப்பு!

அமெரிக்காவில் ஆட்சி மொழியாக ஆங்கிலம் அறிவிப்பு!

ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார்.

ஆங்கில மொழியை முதல் மொழியாகப் பேசுவோரில் 3-ல் 2 பங்கைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் பரவலாகப் பேசப்படும் ஆங்கில மொழி அமெரிக்க ஆங்கிலம் என்று கூறப்படுகிறது. 

ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான ஆங்கிலம் பேசப்பட்ட போதிலும் காலபோக்கில் ஆங்கில ஒலிப்பு முறை மற்றும் எழுத்தில் மாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக ஆங்கிலத்தை மாற்றும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்காவில் 350க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்ற போதிலும் வெள்ளை மாளிகை ஆவணங்களில் எப்போதும் ஆங்கில மொழி மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.