ராமநாதன் கல்லூரி மாணவிக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் - ஆசிரியருக்குசெருப்பினால் அடித்து தூற்றல்!
கொட்டாஞ்சேனையில் அண்மையில் உயிரை மாய்த்துக்கொண்ட பாடசாலை மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் இன்று (08) கொட்டாஞ்சேனை இராஜேஸ்வரி தனியார் கல்வியகம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, பெற்றோர், சமூக ஆர்வலர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் பம்பலபிட்டிய ராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கோரியும் தவறினை மேற்கொண்ட சந்தேக நபர்களான ஆசிரியர்களுக்கு தண்டனை வழங்க கோரியும் வலியுறுத்தினர்.
அத்துடன் குறித்த சந்தேகத்துக்கிடமான ஆசிரியரின் கொடும்பாவிக்கு அவமரியாதை செய்யும் வகையில் செருப்பினால் அடித்து தூற்றினர்.