லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம்?

லிட்ரோ எரிவாயுவின் விலையில் இந்த மாதத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே, வற் வரித் திருத்தம் காரணமாக லிட்ரோ எரிவாயுவில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்காரணமாக வழமையான விலைத்திருத்தம் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.