பால்மாவின் விலையை குறைக்க தீர்மானம்!

இன்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 150 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் 400 கிராம் பால்மாவின் விலையை 60 ரூபாவினால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.