க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டது!

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டது!

கல்வி சமூகத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெறவிருந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிற்போடப்பட்டது.

அதன்படி, குறித்த பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை நேற்று (10) பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.