இன்றுமுதல் இலங்கையில் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கும் சீன நிறுவனம்!

சீன தலைநகர் பெய்ஜிங்கை தலைமையகமாக கொண்ட சினோபெக் நிறுவனம் “சினோபெக் எனர்ஜி லங்கா (பிரைவேட்) லிமிடெட்” என்ற பெயரில் தமது விநியோக நடவடிக்கைகளை இலங்கையில் ஆரம்பித்துள்ளது.

 முன்னணி சர்வதேச பெற்றோலிய விநியோக நிறுவனமான சினோபெக் தமது இறக்குமதி, விநியோகம் மற்றும் சில்லறை விற்பனையை இலங்கையில் இன்றுமுதல் ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்திற்கான நிரப்பு நிலையங்களை இயக்குவதற்கும் அமைப்பதற்கும் முதலீட்டு சபையுடன் (BOI)சினோபெக் நிறுவனம் இன்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

சினோபெக் நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ளது. 

இதில் எரிபொருள் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விற்பனை ஆகியவை அடங்கும் என்பதுடன், நாட்டில் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை சினோபெக் நிறுவவுள்ளது. 

இலங்கை முதலீட்டுச் சபை சட்டத்தின் 17ஆவது சரத்துக்கு அமைய சினோபெக் எனர்ஜி லங்காவின் மேற்பார்வையின் கீழ் 20 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

பெற்றோல், டீசல், விமானங்களுக்கான எரிபொருள் உட்பட பல்வேறு எரிபொருட்களை விற்பனை செய்ய உள்ளது.

சினோபெக் நிறுவனம் சீனாவில் இரண்டாவது பெரிய எரிபொருள் மற்றும் எரிவாயு உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனம் என்பதுடன் எரிபொருள் சுத்திகரிப்பிலும் ஈடுபடுகிறது.

இதேவேளை, உலகின் மூன்றாவது பெரிய இரசாயன உற்பத்தி நிறுவனமும் ஆகும்.