தெமோதரை பேருந்து விபத்துக்கு காரணம் இதுதான்!
பதுளை - தெமோதரை பேருந்து விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் சாரதியின் கவனயீனமே என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பதுளை - தெமோதரை பேருந்து விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் சாரதியின் கவனயீனமே என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேவேளை விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று தெமோதரை பகுதியில், வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
இந்த விபத்தில், காயமடைந்த 21 பேர் தொடர்ந்தும் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் காயமடைந்தவர்களில், 8 பெண்களும் 12 ஆண்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு பாரியளவில் காயங்கள் ஏற்படவில்லை என பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றப் பின்னர் விடுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 50 பேர் அடங்கிய வைத்தியர்கள் குழு சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக சிரேஷ்ட வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.