உணவகம் ஒன்றில் குண்டுவெடிப்பு!
இந்தியாவின் பெங்களூரில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் சிசிடிவி காட்சிகளும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நபர் முகத்தை ஓரளவு மறைத்து பயணிப்பதாகவும், அவரை அடையாளம் காணும் பணியில் இந்திய பாதுகாப்பு தரப்பினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.