இந்தியா கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

இந்தியா கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

நாட்டில் அநீதி இழைத்து வரும் அரசு வேரோடு பிடுங்கி எறியப்படும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார்.

மும்பையில் இன்று நடைபெறும் இந்திய கூட்டணியின் பொதுக்கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

நாட்டின் 18 ஆவது மக்களைவைக்கான தேர்தல்  திகதி  நேற்று அறிவிக்கப்பட்டது. நிலையில் இன்று இந்தியா கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டமொன்று  மும்பையில் நடைபெறவுள்ளது. 

நாட்டின் தென் முனையான கன்னியாகுமரியில் இருந்து வடக்கு எல்லையான காஷ்மீர் வரை, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமைப் பயணம், அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இரண்டாம் கட்டமாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ஆரம்பிக்கப்பட்ட  பயணமானது   கடந்த ஜனவரி 14 திகதி  மணிப்பூரில் தொடங்கினார். நாகலாந்து, அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்கம், பிகார், ராஜஸ்தான், குஜராத் என 15 மாநிலங்கள் வழியாக, சுமார் 6,700 கிலோ மீட்டர் தொலைவுக்கு, 63 நாட்கள் பயணம் செய்த ராகுல் காந்தி, மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில் யாத்திரையை இன்று நிறைவு செய்கிறார்.

இதற்காக, பிரமாண்ட  விழாவொன்றை  காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதில் இந்தியா கூட்டணி தலைவர்களும் பங்கேற்கின்றனர். இதைத் தொடர்ந்து, மும்பை சிவாஜி பார்க்கில் நடைபெறும் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்திலும் ராகுல்காந்தி பங்கேற்று பேசுகிறார். இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சரத்பவார், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.