தமிழக நடிகர் வடிவேலுவின் சகோதரர் காலமானார்!

பிரபல தமிழக நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் இளைய சகோதரர் காலமானார். இவருக்கு மூன்று சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.

தமிழக நடிகர் வடிவேலுவின் சகோதரர் காலமானார்!

பிரபல தமிழக நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் இளைய சகோதரர் காலமானார்.

இவருக்கு மூன்று சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் இருந்தனர். 

இவரது இரண்டாவது சகோதரர் ஜெகதீஸ்வரன் (52) காதல் அழிவதில்லை படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளார். 

கடந்த சில மாதங்களாக பல்வேறு உடல் உபாதை பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றார். 

ஆனாலும் நோயின் பிடியில் இருந்து அவர் விடுபடவில்லை. 

இந்தநிலையில், ஜெகதீஸ்வரன் இன்று காலை காலமானார். 

இதுபற்றிய தகவல் நடிகர் வடிவேலுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.