ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரம் விளக்கம் கேட்டு மாநகராட்சி கடிதம்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியில் எத்தனை அனுமதி சீட்டுகள் விற்கப்பட்டன என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறு, நிகழ்ச்சியை நடத்திய நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி கடிதம் அனுப்பியுள்ளது.

ஏ.சி.டி.சி என்ற நிறுவனம் சார்பில் “மறக்குமா நெஞ்சம்” என்ற தலைப்பில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் கடந்த 10-ம் திகதி நடைபெற்றது.

தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முறையாகச் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்ததால் அரங்கம் நிறைந்து, வெளியே ஏராளமானோர் காத்து நின்றனர்.

போதிய வாகன நிறுத்துமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்படாமையால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து முடங்கியது. 

வடக்கு நெம்மேலியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வீடு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகனமும் நெரிசலில் சிக்கியமை குறிப்பிடத்தக்கது.