மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு தமிழக முதலமைச்சர் கடிதம்!
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
![மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு தமிழக முதலமைச்சர் கடிதம்!](https://tamilvisions.com/uploads/images/202309/img_650482dd01b5c4-68767818-80359161.gif)
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 19 மீனவர்களும் 3 விசைப்படகுகளும் யாழ்ப்பாணத்தில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.