ரயில் நிலைய அதிபர்களின் போராட்டம் தொடரும்!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடருமென தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
வேலை நிறுத்தம் காரணமாக நேற்று பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதோடு ஒருசில ரயில்கள் மாத்திரம் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்ட போதிலும், நேற்றைய தினம் சுமார் 70 ரயில் சேவைகள் இயங்கியுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இ.போ.ச பஸ்களும் பயணிகளின் தேவைக்கேற்ப இயக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.