இந்தியாவின் பிரிவினைக்கு காங்கிரஸே காரணம் - நரேந்திர மோடி குற்றச்சாட்டு
இந்தியா அரசியல் ரீதியாக பல கூறுகளாக பிரிந்து கிடப்பதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சுமத்தியுள்ளார்.
இந்தியா அரசியல் ரீதியாக பல கூறுகளாக பிரிந்து கிடப்பதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சுமத்தியுள்ளார்.
1974ம் ஆண்டு இந்திரா காந்தி அரசாங்கமே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது என்றும் அவர் குறிப்பிட்டார்
இந்தியா மற்றும் இலங்கை இடையே அமைந்துள்ள கச்சத்தீவு, பாரம்பரியமாக இலங்கை மற்றும் இந்திய மீனவர்களால் பயன்படுத்தப்பட்டது.
1974ம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்தோ - இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின் கீழ் கச்சத்தீவை இலங்கையின் பகுதியாக ஏற்றுக்கொண்டார்.
எனவே, காங்கிரஸ்காரர்கள் அரசியலுக்காக இந்தியாவை மூன்றாகப் பிரித்தார்கள் என்று மக்களவையில் தமது அரசாங்கம் மீது கொண்டு வரப்பட்ட அவநம்பிக்கை பிரேரணைக்கு பதிலளிக்கும் போது பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சுமத்தினார்
இந்தநிலையில் கச்சத்தீவை இந்தியாவிற்கு மீண்டும் பெற்றுக்கொள்வது தொடர்பில், தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம் தொடர்ந்தும் கடிதம் எழுதி வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.