ஹரினின் இடத்திற்கு ஹிருணிகாவா: கட்சிக்குள் கோரிக்கை!
சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு பதவியிலிருந்து விலகிய ஹரின் பெர்னாண்டோவின் இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை நியமிக்குமாறு கட்சிக்குள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை கட்சி நீக்கியமை, சட்டத்திற்குட்பட்டது என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து, ஹரின் பெர்னாண்டோ அமைச்சு பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இதேவேளை, தேசிய பட்டியல் ஊடாக ஹரின் பெர்னாண்டோ நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஹரின் பெர்னாண்டோவை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்கியமை சட்டத்துக்கு உடன்பட்டது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து தன்னுடைய அமைச்சுக்கு சென்ற சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஊழியர்களுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு அமைச்சில் இருந்து, வௌ்ளிக்கிழமை (08) வெளியேறினார்.
இந்தநிலையில், ஹரினின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை நியமிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.