புதிய தலைமைக்கு மாறிய பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் சேமிப்பு முனைய நிறுவனத்தின் தலைவராக சாலிய விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் சேமிப்பு முனைய நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்த மொஹமட் உவைஸ் அண்மையில் பதவி விலகினார்.
இந்தநிலையில், பதவி வெற்றிடத்துக்கு சாலிய விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தர்ஷன ரத்னாயக்க, இலங்கை பெற்றோலியக் சேமிப்பு முனைய நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.