மண்சரிவினால் இடம்பெயர்ந்த 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள்!

மாத்தறை, தியலபே, தென்னபிட்டிஹேன மலைப்பகுதியில் மண்சரிவு காரணமாக 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மண்சரிவினால் இடம்பெயர்ந்த 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள்!

மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியை பார்வையிடுவதற்கு யாரும் செல்ல வேண்டாமென அந்த நிலையம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக ஏனைய மாவட்டங்களில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 12 ஆயிரத்து 120 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், மேல் மாகாணத்தில் 9 ஆயிரத்து 489 குடும்பங்களைச் சேர்ந்த 38 ஆயிரத்து 208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 தென்மாகாணத்தில் 2ஆயிரத்து 117 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 605 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது

686 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 930 பேர் நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

 இந்தநிலையில், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளை அறிந்து, உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.