தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் சிலருக்கு விமான பயணச்சீட்டு வாய்ப்பு!
தொழில்நுட்ப பயிற்சியாளர்களாக ஜப்பானுக்கு செல்லும் 15 இலங்கையர்களுக்கு விமான பயணச்சீட்டுக்களை வழங்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குழுவினர் 3 வருட பயிற்சி காலத்திற்கான ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாக அந்த பணியகம் அறிவித்துள்ளது.
பராமரிப்புத்துறை பயிற்சியாளர்களான 5 பெண்களுக்கும் கட்டுமானப் பயிற்சியாளர்களான 10 ஆண்களுக்கும் பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் தொழில்நுட்ப சேவை பயிற்சிக்காக இதுவரை 400க்கும் மேற்பட்ட இலங்கையர்கள், அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.