தடாகத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

தடாகத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு துறைமுக வளாகத்தில் துணை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ஒருவர் கப்பலை பழுதுபார்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த  விபத்து நேற்று (31) காலை நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர் பரகஹவிட்ட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுழியோடிகள் மூலம் அவரை மீட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரையோர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.