12வது தடவையாக இந்துக்களுக்கு இடையிலான சமர் - கிரிக்கட் போட்டி ஆரம்பம்!

இந்துக்களுக்கு இடையிலான மாபெரும் சமர் (Battle of Hindus) என்று வர்ணிக்கப்படும் கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி 12வது தடவையாக இம்முறை கொழும்பு பி சாரா ஓவல் எனப்படும் பி. சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்றைய தினம் (30) ஆரம்பமானது. 

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் பெற்ற பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் அரங்கானது, இலங்கையின் முதலாவது டெஸ்ட் போட்டியை நடத்திய மைதானமாகவும், இலங்கை அணி, முதலாவது டெஸ்ட் வெற்றியை பெற்றுக் கொண்ட மைதானமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

இந்த நிலையில் குறித்த மைதானத்தில் இந்துக்களின் பெருஞ்சமர்  கிரிக்கெட் போட்டி நடைபெறுவது சிறப்பம்சம் என போட்டி ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்றைய தினம் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு இந்துக் கல்லூரி அணி யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.

அந்த வகையில் திறமையான பல வீரர்களைக் கொண்ட இந்த இரு அணியினரும் தங்களது கிரிக்கெட் பல பரீட்சையை நடத்துவதற்காக  போட்டியை மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பித்தார்கள். 

கொழும்பு மற்றும் யாழ்ப்பாண இந்துக்கல்லூரி மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், கிரிக்கெட் ஆதரவாளர்கள் என பல ரசிகர்கள் மைதானத்தில் நிறைந்து இருந்தமையை அவதானிக்க முடிந்தது.

மேலைத்தேய மேள வாத்தியங்கள் முழங்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆரவாரம் செய்தபடி இரு அணியினரையும் உற்சாகப்படுத்தினர்.

தொடர்ந்து நாளையும் இந்த போட்டி தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.