டக்ளஸ் தேவானந்தாவின் யோசனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய போராட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய போராட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 8000 உறுப்பினர்களைக் கொண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட யாழ்;ப்பாண மாவட்ட மீனவர் சங்கங்கள் தங்களது மீன்பிடி படகுகளை வீதிக்கு இழுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
இலங்கை கடற்பரப்பில் சிறிய இந்திய படகுகளுக்கு உரிமம் வழங்கும் முறையின் கீழ் மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்கும் அமைச்சரின் நடவடிக்கையை ஆட்சேபித்தே இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த செயற்பாடு, தமது வாழ்வாதாரத்திற்கும் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ; தெரிவி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்
உரிமம் வழங்குவதில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடையே லஞ்சம் மற்றும் ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் எல்.முருகன் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பின்னர், யாழ்ப்பாணத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்திய கலாசார நிலையத்தை திறந்துவைத்த பின்னரே அமைச்சரின் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
இந்தநிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய அரசின் அழுத்தத்திற்கு அரசு அடிபணிந்து வருவதாகவும், இதனால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும் வடமாகாண மீனவர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
எனினும் கடற்றொழில் அமைச்சர் தேவானந்தா, வடக்கு கடற்பரப்பில் இடம்பெறும் இழுவை இழுவையை தடுத்து, இருதரப்பு மீனவர்களுக்கும் இடையிலான பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கையே இந்த அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான முன்மொழிவு என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அமைச்சர்; தெரிவித்துள்ளார்.