4.8 பில்லியன் ரூபாவை நிகர இலாபமாக ஈட்டிய சுயாதீன மின் உற்பத்தியாளர்

4.8 பில்லியன் ரூபாவை நிகர இலாபமாக ஈட்டிய சுயாதீன மின் உற்பத்தியாளர்

*4.8 பில்லியன் ரூபாவை நிகர இலாபமாக ஈட்டிய சுயாதீன மின் உற்பத்தியாளர்*

2000ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து தேசிய மின்சாரக்கட்டமைப்பு, மின்சாரத்தை விற்பனை செய்யும் ஒரு சுயாதீன மின் உற்பத்தியாளர் நிறுவனம்,2021 மார்ச் மாதத்துக்குள் 14.8 பில்லியன் ரூபாவை நிகர இலாபமாக ஈட்டியுள்ளது.

இது அதன் ஆரம்ப முதலீட்டில் 855 சதவீதமாகும் என்று அரச கணக்காய்வாளர் திணைக்களம் கண்டறிந்துள்ளது.

2005 முதல் 2015 வரை, எயிட்கன் ஸ்பென்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏசிஇ மின்சார உற்பத்தி நிறுவனம்,2005- 2015வரை 8.57 பில்லியன் ரூபா நிகர இலாபத்தை ஈட்டியது.

இது அந்த நிறுவனத்தின் ஆரம்ப முதலீடான 1.67 பில்லியன் ரூபாய்களில் 511 சதவீதமாகும்.

2005-2007இல் நிறுவனத்தின் இலாபம் மட்டும் மொத்தம் 1.8 பில்லியன் ரூபாய்களாகும்.

எனினும், மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக அல்லாமல், நடுத்தர மற்றும் நீண்டகால மின்சார திட்டங்களை நடைமுறைப்படுத்தாமை காரணமாகவே, இந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து இலங்கை மின்சாரசபை, மின்சாரத்தை தொடர்ந்தும் கொள்வனவு செய்து வந்ததாக கணக்காய்வாளர் நாயக திணைக்களம் கண்டறிந்துள்ளது.