கழிவு தேயிலையுடன் உரிமையாளர் கைது 

கழிவு தேயிலையுடன் உரிமையாளர் கைது 

கம்பளை விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் நான்கு சட்டவிரோத தேயிலை களஞ்சியசாலைகளை சுற்றிவளைத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 13  கிலோ கழிவு தேயிலையுடன் நான்கு உரிமையாளர்களையும் கைது செய்தனர்.

உடுநுவர லீமகஹா பிரதேசத்தில் உள்ள குறித்த நான்கு களஞ்சியசாலைகளிலும் கழிவு தேயிலையில் பல்வேறு இரசாயனங்களை கலந்து உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட நால்வர் கழிவு தேயிலையுடன் தவுலாகல பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.