தேங்காய் எண்ணெய் மோசடியில் ஈடுபட்ட தேரருக்கு விளக்கமறியல்
குளியாப்பிட்டிய பகுதியில் தேங்காய் எண்ணெய் வியாபாரி ஒருவரிடம் தேங்காய் எண்ணெய் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் மாளிகாவத்த ஸ்ரீ போதிராஜாராம விகாரையின் உவத்தண்ணே சுமன தேரரை விளக்கமறியலில் வைக்க குளியாப்பிட்டி நீதவான் இன்று 21ஆம் திகதி உத்தரவிட்டுள்ளது.
ஜயவிக்ரம பெரேரா என்ற வர்த்தகர் செய்த முறைப்பாட்டின் படி குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த தேரர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முறைப்பாடு செய்த வர்த்தகரிடம் இருந்து பத்து மில்லியன் ரூபாய் பெறுமதியான தேங்காய் எண்ணெயைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்தமைக்கு எதிராக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்குளி பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து தேங்காய் எண்ணெய் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதுடன், சந்தேகநபர் குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று 20ஆம் திகதி கைது செய்யப்பட்டு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
குளியாபிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் திலகரத்ன தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.