வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சோழனின் நிவாரணம்!
தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்ந்து நற்பணிகளைச் செய்து வரும் People Helping people Foundation (PHPF) உடன் இணைந்து Cholan Book of World Records (CBWR), மற்றும் மருத்துவர் சிந்துஜாவும் (Dr.Sindhuja) இணைந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இன்று 900,000/- (ஒன்பது இலட்சம் ரூபாய்) பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கின.
இந்த நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பகுதியில் அமைந்துள்ள லங்கா லர்னிங் சென்டரில் (Lanka learning centre) நடைபெற்றது.
STEPS OF FORGIVENESS அமைப்பின் இயக்குனரும் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் ஐரோப்பிய நாடுகளுக்கான தலைவருமான பிரான்சிஸ் ஜேசுதாசன் நிகழ்வை முன்னின்று நடத்தினார்.