பெண்களின் தொழில் முயற்சியை வலுவூட்டுவது தொடர்பில் புதிய வேலைத்திட்டம்!

பெண்களின் தொழில் முயற்சியை வலுவூட்டுவதற்கான விரிவான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனூடாக, பெண்களுக்கான வர்த்தக சமூகத்திற்கு தேவையான ஆதரவை, அரசாங்கம் வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த வருடத்தில் நாட்டின் பொருளாதாரம் கணிசமான வளர்ச்சியை காட்டும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.