சிங்களம் என்ற இனமே இருக்கவில்லை! - தமிழ் பெளத்தம் மறைக்கப்பட்டது ஏன்? விஜயன் வருகை கற்பனை கதையா?

முதற் சிங்கள இலக்கண நூலான சிதத் சங்கிராவ கி.பி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ி.பி 7ஆம் நூற்றாண்டுக்கு முந்திய கல்வெட்டுகளில் சிங்களம் மக்களின் மொழியாகவும் இனமாகவும் குறிப்பிடப்படவில்லை. “சிஹல ” (பாளியில் சிங்கம்) என்ற சொல் முதன் முறையாக தீப வம்சத்தில் (கி.பி 5 ஆம் நூற்றாண்டு) குறிப்பிடப்படுகின்றது.

சிங்களம் என்ற இனமே இருக்கவில்லை! - தமிழ் பெளத்தம் மறைக்கப்பட்டது ஏன்? விஜயன் வருகை கற்பனை கதையா?

முதற் சிங்கள இலக்கண நூலான சிதத் சங்கிராவ கி.பி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

கி.பி 7ஆம் நூற்றாண்டுக்கு முந்திய கல்வெட்டுகளில் சிங்களம் மக்களின் மொழியாகவும் இனமாகவும் குறிப்பிடப்படவில்லை.

“சிஹல” (பாளியில் சிங்கம்) என்ற சொல் முதன் முறையாக தீப வம்சத்தில் (கி.பி 5 ஆம் நூற்றாண்டு) குறிப்பிடப்படுகின்றது. 

சிங்கங்களின் இருப்பு காரணமாக தீவு சிஹல என்று அழைக்கப்பட்டது என்று ஒருமுறை மட்டுமே சொல் வருகிறது. 

மகாவம்சத்தில் சிஹல என்ற சொல் இருமுறை வருகிறது.

ஆனால், சிங்கள மக்கள் என்றோ சிங்களம் என்ற மொழியோ குறிப்பிடப்படவில்லை.

ஆர்.ஏ.எல்.எச். குணவர்தன தனது "சின்ஹல அடையாளமும் சிந்தனையியலும்" (1979)என்ற நூலில் குறிப்பிடப்படுகின்றார்.

கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கையில் உள்ள முழு மக்களையும் உள்ளடக்கியதாக சிங்கள அடையாளம் இருந்ததில்லை.

 அது ஒரு சிறிய இனக்குழு வர்க்கம் மட்டுமே என்றும் கூறுகிறார் . இந்நிலை கண்டி இராசதானியின் அரசனாக வருவதற்கான தேவை இருந்தும் தமிழரான ஒருவரே அரசனாக வரவேண்டிய நிர்ப்பந்ததத்தை ஏற்படுத்தியது.

இது சிங்களவர்களுள் ஒருவர் தெரிவாவதற்கான ஆளுமையற்ற வலுவற்ற தன்மையை வெளிக்காட்டி நின்றது.

கி.பி 12 ஆம் நூற்றாண்டு வரை சிங்களம் முழுமையான மக்கள் மொழியாக மாறவில்லை.

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் ஏற்பட்ட சிங்கள பெளத்த மேலாதிக்கமும் அது அதிகாரம் முழுவதையும் கைப்பற்றிக் கொண்டமையும் கேட்பாரற்று இனவழிப்பாக மாற்றமடைந்த போது சிங்களம் என்றுமில்லாதவாறு முழு இலங்கைத்தீவின் பேரரசாகவும் படையணியையும் பெற்றுக் கொண்டமையும் தமிழர் தரப்பின் வசம் எதுவுமில்லாதவாறு ஆங்கிலேயர்களால் நிராயுதபாணிகள் ஆக்கப்பட்டு நின்றமையே இதற்கு காரணமாக அமைந்தது.

தமிழர் தரப்பின் பாதுகாப்பிற்காக சமஷ்டி போன்று எந்தவித பாதுகாப்பற்ற நிலையே இதற்கு காரணமாக அமைந்தது.

இப்போதுள்ள சரித்திரப் புத்தகங்கள் முன்பு போல் விஜயன் வந்ததிலிருந்து ஆரம்பிக்கவில்லை.

இலங்கையில் விஜயன் தரையிறங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இருந்த கற்கால நாகரிகத்துடன் அவை தொடங்குகின்றன.

சிங்களத்தின் கற்பனையான விஜயன் வருவதற்கு முன்பே இந்தத் தீவில் நிரந்தரக் குடியேற்றங்கள், விவசாயம், ஆற்றல்களைப் பயன்படுத்துதல், இரும்பின் பயன்பாடு, நகரமயமாக்கல் போன்றவை இடம்பெற்றிருந்தன என்பதை இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஆதாரங்கள் எடுத்தியம்புகின்றன.

நமது வரலாற்றை ஏற்றுக்கொள்கின்றன.

வட இந்தியாவில் உள்ள எந்த மாநிலங்களின் பழங்கால வரலாறு குறித்த நூல்கள் எதுவும் எந்த காலத்திலும் விஜயன் என்ற ஆளொருவர் 700 பேர்களுடன் அவர்களின் கரையிலிருந்து புறப்பட்டதைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

பாளி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் பௌத்தத்தை மகிமைப்படுத்துவதற்காக எழுதப்பட்ட புனைகதை என்பதே நம்பத்தகுந்ததாகும்.

உண்மையில் மகாவம்ச ஆசிரியர் ஒவ்வொரு சரணத்தின் [சீர் ] முடிவிலும் அவ்வாறே குறிப்பிடுகிறார். 

ஆனால் (கற்பனையான) விஜயன் வருவதற்கு முன்னர் இந்த நாட்டில் வாழ்ந்த மக்கள் யார் என்பதை இதுவரை சிங்கள வரலாற்றாசிரியர்கள் அப்பட்டமாக மூடிமறைக்க முயன்றுள்ளனர் என்பதையே இவை நிரூபிக்கின்றன.

ஏனெனில் உண்மையைச் சொல்லும் எந்த முயற்சியும் தமிழர்களை இந்நாட்டின் பூர்வீக குடிகள் என்பதை ஏற்றுக்கொண்ட ஆதாரமாகிவிடும் இது சிங்களத்தின் புனைவு வரலாற்றை அம்பலமாக்கிவிடும் என்பதாலேயே ஆகும். 

இலங்கையில் ஆரம்பம் முதல் மிகு‌ந்த செல்வாக்கோடு விளங்கிய மகாயான பெளத்த தலங்கள் அதன் விகாரையான அபயகிரி போன்றவை கைவிடப்பட்டும் அழிக்கப்பட்டும் ஆறுமுக நாவலர் குறிப்பிட்டதை போன்ற இறந்த இந்தோ ஆரிய மொழியில் (பாளி) 6 ஆம் நூற்றாண்டில் அமைந்த தேரவாத மகாவம்ச வரலாறுகள் புனைவுகளை கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன. 

1970 மற்றும் அதற்கும் பின்னரான காலகட்டத்தின் முக்கியத்துவமானது.

 அறிவியல் ரீதியாகவும் தொல்லியல் ரீதியாக வும் ஆய்வுகள் இடம்பெறத் தொடங்கியதில் இருந்தும் அது மட்டுமின்றி, பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த புலமை வாய்ந்த வெளிநாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் யுனெஸ்கோ நிபுணர்களும் இணைந்து எமது உள்ளூர் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவிய காரணமாக போலி சிங்கள பௌத்த வரலாற்றாசிரியர்களின் நம்பகத்தன்மை வலுவிழக்க தொடங்கி விட்டது. 

கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு மற்றும் தென்னிலங்கையின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் படி 125000 ஆண்டுகளுக்கு முன்னரே இத்தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்பொருள் சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன.

கலாநிதி சிரான் தெரணியகல தனது ஆய்வுகள் மூலம் இதனை வெளிக்கொண்டு வந்துள்ளார். 

கற்காலத்தை பொதுவாக மூன்று காலங்களாகப் பிரிக்கலாம்.

1. பழங்கற்காலம் (பழைய கற்காலம்) (கிமு 10000க்கு முன்)

2. மெசோலிதிக் (மத்திய கற்காலம்) (கிமு 10000க்கும் கிமு 8000க்கும் இடைப்பட்ட காலம்)

3. புதிய கற்காலம் (புதிய கற்காலம்கி. மு. 8000 முதல்கி.மு. 3000வரை). (கிரேக்கம் – லித்தோஸ் – கல்).

ஆனால் சில பகுதிகளில் கி.மு. 10000க்கு முன்பே மத்திய கற்காலம் காலம் தொடங்கியிருக்கலாம். 

30000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மெசோலிதிக் [மத்தியகற்கால ] மக்கள் நமது மலைநாட்டிலும் தாழ்நிலங்களிலும் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.

சுமார் 75 சான்றுகள் கிடைத்துள்ளன. இந்த மெசோலிதிக் மக்களில் பெரும்பான்மையானவர்கள் முக்கியமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

நாடோடி வாழ்க்கை நடத்தினார்கள். குகைகள், குன்றுகள் மற்றும் சமதளங்களில் உள்ள கண்டுபிடிப்புகளிலிருந்து நாகரிகத்தில் அவர்களின் முன்னேற்றம் உணரப்படுகிறது. 

இந்த மக்களுக்கும் தற்போதைய தமிழ்நாட்டின் தென்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கும் இடையேயான வாழ்க்கை முறைகளில் நெருங்கிய ஒற்றுமைகள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

தொல்லியல், மானிடவியல் மொழியியல் மற்றும் வரலாறு ஆகிய துறைகளில் நிபுணர்களால் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இவர்கள் பேசும் தமிழ் மொழியில் காணப்பட்ட சுமார் 200 சொற்கள் பின்னர் சிங்கள மொழிக்கு கொண்டு செல்லப்பட்டன. 

தென்னிந்தியாவில் திருநெல்வேலி மாவட்டத்தில் பயன்படுத்திய கருவிகள் நமது மத்திய கற்கால கால மக்கள் பயன்படுத்தியவை என்று அதிகாரபூர்வமாகக் கூறப்பட்டுள்ளது.

பேராசிரியர் இந்திரபாலா வின் கூற்றுப்படி, இந்த நாகரிகம் தென்னிந்தியாவில் இருந்து வட இலங்கை வரை பரவியது.

பின்னர் இலங்கையின் பிற பகுதிகளுக்கும் பரவியது. 

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தீவில் ஆரம்ப இரும்புக் காலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அங்கும் தென் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே மிக நெருக்கமான ஒற்றுமைகளைக் காண்கிறோம்.

1970 களில் கந்தரோடையில் ஆய்வுகளை மேற்கொண்ட விமலா பெக்லி, பழங்காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வசித்தவர்கள் தற்போதைய தமிழகத்தின் தென்பகுதியுடன் மிக நெருங்கிய உறவைக் கொண்டிருந்தனரென்ற முடிவுக்கு வந்திருந்தார். 

இலங்கையில் தமிழகத்தின் கலாசார தொடர்பு கந்தரோடை தொடக்கம் புத்தளம் வரை பரவியுள்ளது.

குறிப்பாக புத்தளம் மாவட்டத்திலுள்ள பொம்பரிப்பு, கந்தரோடையில் காணப்படுவதுடன் மிக நெருக்கமான ஒற்றுமையைக் கொண்டிருந்தது.

பேராசிரியர் சுதர்சன செனவிரத்னவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் கற்கால மக்களின் கலாசாரம் அன்றைய தென்னிந்திய கலாசார சூழலின் எல்லைக்குள் வந்தது என்பதை பேராசிரியர் இந்திரபாலா வும் உறுதிப்படுத்துகிறார். 

இதனால், இலங்கையின் ஆரம்பகால குடிமக்கள் வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்ற கருத்து இப்போது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மகாவம்சத்தின் காலத்திற்கு முன்பே, இலங்கை தென்னிந்தியாவைப் போன்ற ஒரு கலாசாரத்தை கொண்டிருந்தது மற்றும் அந்த பழங்காலத்தவர்கள் தற்போதைய சிங்கள மற்றும் தமிழர்களின் முன்னோர்களாக இருந்தனர் என்பது ஒப்புக் கொள்ளப்படுகிறது.

இந்தப் பழங்காலத்தவர்களுக்கு இன வேறுபாடுகள் இல்லையென்றாலும் கலாசார வேறுபாடுகள் மட்டுமே இருந்ததாக பேராசிரியர் சேனக பண்டாரநாயக்க கூறியுள்ளார்.

இந்த வேறுபாடுகள் விஜயன் என்று அழைக்கப்படுபவர் தீவுக்குச் செல்வதற்கு முன்பே இருந்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

பண்டைய கற்கால மக்களின் கலாசாரம் மற்றும் வாழ்க்கைப் பழக்கவழக்கங்களை ஆய்வு செய்தால், அவர்கள் தங்கள் பெயரையோ அல்லது மண் பானைகள் மற்றும் பாத்திரங்களை வடிவமைத்தவர்களின் பெயர்களையோ பொறிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர்.

இந்தப் பழக்கம் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் அன்றைய காலகட்டத்தில் இருந்ததாகக் காணப்படுகிறது.

இந்தப் பழக்கம் இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லை. தமிழ்நாட்டிலும் அநுராதபுரத்திலும் மண் பானைகளில் இந்த எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

அநுராதபுர பானைகள் 2750 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தைச் சேர்ந்தவை. பானைகளில் உள்ள எழுத்துக்கள் தமிழ் மொழியில் தமிழ் எழுத்துக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்புதான் வட இந்தியாவில் எழுத்து தொடங்கியது.

ஆனால் தமிழ்நாடு மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் இந்த எழுத்துக்கள் மிகவும் முன்னதாகவே இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

இப்போது வரலாற்றாசிரியர்கள் எழுத்துக் கலை தெற்கிலிருந்து வட இந்தியாவுக்குச் சென்றதாக நம்புகிறார்கள். 

தென்னிந்தியாவின் மதுரையில் சமீபத்திய கீழடி அகழ்வாராய்ச்சிகள் இந்தியாவில் உள்ள அனைத்து நாகரிகங்களுக்கும் முன்னரான நாகரிகத்தின் சான்றுகளைக் காட்டுகின்றன.

இலங்கையில் பௌத்தம் புகுத்தப்படுவதற்கு முன்னரே, தற்போதைய சிங்கள, தமிழர்களின் முன்னோர்கள் இங்கு வாழ்ந்தவர்கள் என்பது விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். சமீபத்திய டிஎன்ஏ சோதனைகள் இதை உறுதிப்படுத்தின. 

சிங்கள எழுத்துக்களை ஆராயும் போது, ​​பேராசிரியர் பெர்னாண்டோ, பேராசிரியர் சத்தா மங்கள கருணாரத்ன மற்றும் பேராசிரியர் ஆரிய அபேசிங்க ஆகியோர், பௌத்தத்துடன் வட இந்திய பிராகிருதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னரே, தென்னிந்திய எழுத்தைப் போன்றே இலங்கையில் இருந்ததாகக் கூறியுள்ளனர்.

சிங்கள மொழி பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னர் இலங்கையில் தமிழ் எழுத்தும் தமிழ் மொழியும் தமிழ்ச் சொற்களும் பயன்பாட்டில் இருந்ததை அவர்களின் ஆய்வுகளிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.

அதனால்தான்,எமது முன்னோர்களின் மொழி தமிழ் என்றும், இலங்கையின் பூர்வீக பழங்குடி மக்கள் தமிழர் என்றும் உறுதியாக கூறமுடியும். 

கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தத் தீவில் பௌத்தம் பரவியது. அடையாளம் காணப்பட்ட 1500 கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. 

இந்தக் கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.

அப்போது சிங்கள எழுத்துகளோ சிங்கள மொழியோ சிங்கள மக்களோ இல்லை. பௌத்தம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னரும், இலங்கையில் தமிழ் மொழியே பயன்பாட்டில் இருந்தது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இவ்வரலாறு ஐரோப்பியர் இலங்கைத்தீவின் யாழ்ப்பாண, வன்னி, கண்டி ,கொழும்பு இராச்சியங்களை கைப்பற்றும் காலம் வரை தொடர்ந்து இருந்தமை நம்பத்தகுந்த ஆதாரமாகும். 

பேராசிரியர் பரணவிதாரண வட இந்திய பிராகிருதத்தை பழைய சிங்கள எழுத்து என்று அடையாளம் காட்ட முயன்றாலும், பிராகிருதம் எங்கெல்லாம் பயன்பாட்டில் இருக்கிறதோ அங்கெல்லாம் சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் என்பதைக் காட்ட முயன்றாலும், பௌத்தம் பரவியவுடன் பிராகிருத எழுத்துகளும் இலங்கையில் மட்டுமல்ல இந்திய, தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவிக் காணப்பட்டமை காரணமாக பேராசிரியரின் இந்தக் கூற்று இப்போது ஏற்கப்படவில்லை.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் கல்வெட்டுகளின் எழுத்துப்படிவம் 700 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்தது. பிராகிருதம் பழைய சிங்களம் அல்ல.

அப்படி இருந்திருந்தால், ஏனைய தென்கிழக்காசிய நாடுகளிலும் சிங்கள மொழி பேசப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் தமிழ்நாட்டில் பௌத்த கல்வெட்டுகளின் மொழி தமிழாகும்.

 பொதுவாக வட பிராமி பயன்படுத்தப்பட்டாலும், இலங்கையில் உள்ள 1500 பிராமி கல்வெட்டுகளை ஆய்வு செய்தால், கூடுதலாக பல தமிழ் வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாகத் தனிப்பட்ட தமிழர்களின் பெயர்கள் தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தனி மனிதர்களுக்கிடையேயான உறவுகள் தமிழ் மொழியில் குறிப்பிடப்படுகின்றன.

இடப்பெயர்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் ஆட்சியாளர்களின் பட்டங்கள் கூட தமிழில் எழுதப்பட்டன.

இது பௌத்தம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் இலங்கையில் தமிழ் மொழி இருந்ததைக் காட்டுகிறது.

எனவே பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் தமிழர்கள் இந்தத் தீவில் பூர்வீகக் குடிகளாவர் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

சிங்கள மொழியின் பரிணாம வளர்ச்சியை ஆராய்ந்தால், மலையாளத்தின் பரிணாம வளர்ச்சியில் நாம் ஒரு சமாந்தரத்தை கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.

தற்போதைய கேரளம்,  தமிழ்நாட்டில் தமிழ் பேசும் பகுதிகளில் ஒரு பகுதியாக இருந்து அவை தமிழ் சேர மன்னர்களால் ஆளப்பட்டன.

கி.பி 10 ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் மீது சமஸ்கிருதத்தின் பெரும் தாக்கம் காரணமாக தமிழ் மலையாளமாக திரிபடைந்தது.

தமிழ் மொழியின் மீது பாளி மொழி தாக்கம் சிங்கள மொழியாக திரிபடைந்து13 ஆம் நூற்றாண்டில் உருவாகியது. 

அதேபோன்று இலங்கையில் பௌத்த மொழியாக அறிமுகப்படுத்தப்பட்ட பாளி மொழியானது உள்ளூர் தமிழ் மொழியுடன் கலந்து பல்லவர் காலமாகிய அப்பர், திருஞான சம்பந்தர் போன்ற சைவ சமய மறுமலர்ச்சி இலங்கைத்தீவில் தாக்கம் காரணமாக கி.பி 6 அல்லது 7 ஆம் நூற்றாண்டுகளில் அரும்பத் தொடங்கியது . சிங்களம் என்ற புதிய மொழியாக உருவாகியது. 

இதற்கான ஆதாரங்கள் சிகிரியாவில் காணப்படுகின்றன.

கி.பி 5 ஆம் நூற்றாண்டின் சிகிரியா கல்வெட்டுகள் ஆரம்பகால சிங்களவர்களை இன்னும் முறையான மொழியை உருவாக்கவில்லை என்பதை சித்தரிக்கிறது.

இதனால் கி.பி 7ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் சிங்கள மொழி இருந்ததற்கான ஆதாரம் இல்லை. பல்லவர் கால கிரந்த எழுத்துக்களுடன் பிராமி எழுத்துக்களும் கலந்ததால் சிங்கள எழுத்துமுறை தமிழ் வட்டெழுத்து வடிவில் உருவானது. 

ராஜவளிய, பூஜாவளி ய போன்ற சிங்கள இலக்கியங்கள் கி.பி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

தமிழர்கள் இத்தீவில் வெகுகாலமாக வாழ்ந்து வருகின்றனர் என்பதை முன்னைய தமிழ்ச் சங்க காலம் மற்றும் இரண்டாம் சங்க காலம் (முதல் சங்கம் மற்றும் இடை சங்கம்) கடந்த சங்ககால (கடை சங்கம்) இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாதும் ஊரே யாவரும் கேளீர் என உரைத்த கனியன் பூங்குன்றனார் பற்றி முதன்முதலாக வெளிப்படுத்திய உ.வே.சாமிநாதையர் பூங்குன்றனாரை மணிபூங்குன்றனார் என்றும் குறிப்பிடுகின்றார்.

இதனை இணுவில் வீரமணி ஐயரின் ஆசான் பண்டிதர் ஆறுமுகம் அவர்கள் முல்லைத்தீவு பேராற்றங்கரையின் மணிமலையைச் சேரந்தவர் என்கிறார்.

அதேபோன்று பல சங்க கால தமிழ்ப்புலவோர் ஈழத்தைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளார்கள் ஆனால் தற்போதைய விக்கிபீடியா தவறான தகவல்களை தருகின்றது.

முன்னைய சங்க கால இலக்கிய படைப்புகள் கடை சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன.

தமிழ் இந்த உலகின் ஆரம்பகால மொழிகளில் ஒன்றாக விளங்கிய போதினும் பழங்காலத்திலிருந்தே பாண்டிய, பல்லவ, சோழர் இலங்கையை வெற்றிகொண்டிருந்த போது  அவர்களுடைய தாக்கமும் இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ளன என்பதை ஏற்றுக்கொள்கிற அதேவேளை இலங்கையில் தமிழர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தீவில் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் ஏற்கப்பட வேண்டியதே.

பௌத்தம் சிங்களவர்களுடையது என்றும் இந்து மதம் தமிழர்களுடையது என்றும் குறிப்பிடும் தற்போதைய போக்கு பிழையானது.

ஒரு நாட்டிற்குள் மதங்கள் புகுத்தப்படும் போது குறிப்பிட்ட இனம் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அறிமுகப்படுத்தப்படுவதில்லை.

இத்தீவில் பௌத்தம் புகுத்தப்பட்டபோது சிங்களவர்கள் யாரும் இருக்கவில்லை.

இதனால் தமிழ் மன்னன் தேவநம்பிய தீசன் புத்த மதத்திற்கு மாறினார். 

பாளி இலக்கியங்களிலும் பிராமிக் கல்வெட்டுகளிலும் தமிழ் பௌத்தர்கள் இருந்ததற்கான கணிசமான சான்றுகள் உள்ளன.

தமிழ் மன்னர்கள் பௌத்தம் மற்றும் பௌத்தநெறிகளை ஆதரித்த போது அவர்களுக்கு புத்த தாசன் மற்றும் புத்ததேவன் என்ற பட்டங்கள் வழங்கப்பட்டன. 

15 அல்லது 16 ஆம் நூற்றாண்டு வரை பாளி இலக்கியத்தின் படி தமிழ் பௌத்தர்கள் இருந்தனர்.

வட இலங்கையில் உள்ள நயினாதீவு கல்வெட்டுகள் தமிழ் பௌத்தர்களைக் குறிக்கின்றன.

பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தனது “தெமல பௌத்தயோ”வில் தமிழ் பௌத்தர்களைக் குறிப்பிடுகிறார். 

தமிழ் நாட்டில் பக்தி வழிபாட்டு முறை தோன்றுவதற்கு முன்பே வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியிலும் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.

பாளி இலக்கியம் மற்றும் சில கல்வெட்டுகள் அநு ராதபுரத்தில் தமிழர்களின் இருப்பு மற்றும் செல்வாக்கு பற்றி குறிப்பிடுகின்றன.

இந்நிகழ்வு ரொபர்ட் நொக்ஸ் கண்டி அரசனால் சிறைப்பிடிக்கப்பட்டு தப்பியோடி அநுராதபுரம் வந்தபோது அநுராதபுரத்தில் சிங்கள மொழி தெரிந்தவர்களை காணமுடியவில்லை என்ற கூற்றிலிருந்து மிகப்பெரிய ஒரு விடயத்தை நாம் கண்டறிய முடியும்.

அதாவது பண்டைய புராதன பெளத்த தலங்கள் அமைந்திருந்த அங்குள்ள மக்களுக்கு சிங்கள மொழி தெரிந்திருக்கவில்லை என்பதிலிருந்து அங்கே அமைந்திருக்கும் பெளத்த தலங்கள் அனைத்தும் தமிழ்ப் பெளத்தமான மகாயான பெளத்தத்தைச் சேர்ந்தவை என்பதே அவ்வரிய உண்மையாகும் இவ்வுண்மை பல விடயங்களை அறிந்துகொள்ள கால்கோளாகின்றது.

 நன்றி :  Pratheepa Sivanantham