சில மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரிப்பு - சந்தை நிலவரம்!
இன்றைய நாளில் சந்தையில் சில மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இன்றைய நாளில் சந்தையில் சில மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
போஞ்சி, கரட், லீக்ஸ், மற்றும் முள்ளங்கி போன்ற மரக்கறிகள் கிலோ ஒன்று 400 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு கிலோகிராம் தக்காளி 500 ரூபாயாகவும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாயாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 400 முதல் 450 ரூபாயாக அதிகரித்துள்ளது.
விவசாயிகளிடம் கொள்வனவு செய்யப்படுகின்ற விலையை விட அதிகரித்த விலையிலேயே மரக்கறிகள் விற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.