வெள்ளப்பெருக்கைக் குறைக்க 07 விசேட திட்டங்கள்!

வெள்ளப்பெருக்கைக் குறைக்க 07 விசேட திட்டங்கள்!

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை துரிதப்படுத்துமாறு காணி அபிவிருத்தி கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கைக் குறைப்பதற்காக காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் 07 விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தை குறைக்கும் திட்டம் 03 கட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.

வெள்ள அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் 2019ஆம் ஆண்டு முதல் மாதிவெல தெற்கு மாற்றுப்பாதைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

களு பாலத்தில் முன்மொழியப்பட்ட Gate Mounted Pumps களை நிறுவுதல், நிர்மாண வேலைத் திட்டம் 2021 முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இரண்டு திட்டங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்காக முறையே 10 இலட்சம் ரூபாய் மற்றும் 90 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.