முக்கிய பிரமுகரின் காரின் மீது நாரஹேன்பிட்டயில் துப்பாக்கிச் சூடு!

நாரஹேன்பிட்ட பகுதியில் இன்று இரவு (17) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துஷித்த ஹல்லோலுவ பயணித்த காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடந்த தருணத்தில் துஷித்த ஹல்லோலுவவின் காரில் சாரதியும் சட்டத்தரணியும் இருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு துஷித்த ஹல்லோலுவவுக்குச் சொந்தமான ஆவண கோப்பை (Document files) யாரோ திருடிச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.